
வாணியம்பாடி: போதைப்பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
வாணியம்பாடி போலீசார் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான வெலதி காமணிபெண்டா மலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய இருவரை விசாரித்தனர். அவர்களின் பையை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர்கள் ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(40) மற்றும் குமரவேல்(35) என்பதும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ 900 கிராம் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.







































