வேலூர் மாவட்டம் வாணியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாகாயம் போலீசார், சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வேலப்பாடியை சேர்ந்த தாமோதரன், விருபாட்சிபுரம் பிரேம்குமார், ஓல்டு டவுன் சின்னதுரை என்பதும், கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.