முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலைகள் மற்றும் திருவுருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை, இளைஞர்களுக்கு வேட்டி, டி-ஷர்ட் வழங்கியும், அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.