8ம் வகுப்பு மாணவி விடுதியில் தற்கொலை முயற்சி.

16பார்த்தது
8ம் வகுப்பு மாணவி விடுதியில் தற்கொலை முயற்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கதவாலம் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன்-நந்தினி தம்பதியினரின் மகள்களான பவித்ரா (15), ரித்திகா (13) ஆகியோர் வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக விடுதியில் தங்க பிடிக்காத ரித்திகா, தனது அக்காவிடம் பலமுறை தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அக்கா இது குறித்து தாயிடம் தெரிவிக்காததால், ரித்திகா இன்று 12 மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி