வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சேர்ந்த தொண்டர்கள் இரண்டு யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக 2 யூனிட் இரத்தம் தேவை படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். சத்தாம் ஹுசேன் என்பவருக்கு தொலைபேசி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். சத்தாம் ஹுசேன் உடனடியாக கட்சி தொண்டர்கள் இரண்டு பேரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினார்.