வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் கோகுல் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயகுமார் என்பவரின் வீட்டில் 5 ஆண்டுகளாக பிரம்மா கமலம் மலர் செடி வளர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு செடியில் நேற்று இரவு 10 க்கும் மேற்பட்ட பிரம்மா கமலம் மலர்கள் பூத்துக் குலுங்கியது. இந்த பூக்களுக்கு வழக்கறிஞர் ஜெயகுமார் குடும்பத்தினர் தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்து தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுகின்றனர்.