திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இருந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்ததன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.