திருப்பத்தூர்: பாலாற்றில் செத்து மிதக்கும் மீன்கள்..பரபரப்பு

78பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கள்ளத்தனமாக ஆற்றில் திறந்து விடப்படும் தொழிற்சாலை கழிவு நீரால் பாலாற்றில் செல்லும் நீரானது வெண்மை நிறத்தில் நுரை படர்ந்து நீர் முழுவதும் நிறம் மாறி மாசடைந்து ஆற்று நீர் முழுவதிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தோல் தொழிற்சாலைகளுக்கு துணை போவதாகவும் இதனால் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய வளங்கள் அனைத்தும் நாசமாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி