வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அமுலு விஜயன், மீண்டும் அதே தொகுதியில் மக்கள் பணியாற்ற இன்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தனது பணிகளுக்கு உறுதுணையாக இருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ. பி. நந்தகுமார் எம். எல். ஏ மற்றும் வேலூர் எம். பி கதிர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, இந்த விருப்பமனுவை அவர் அளித்துள்ளார்.