வேலூர் மாவட்டம் கட்டுப்படியை சேர்ந்த காந்தாமாள்(85) என்பவர், கடந்த 31ம் தேதி வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.