குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பரதராமியை அடுத்த டி. பி. பாளையம் கிராமம் அருகே, தமிழக எல்லையிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் ஆந்திர மாநில குட்டா ஏரியில், காலில் காயமடைந்த 6 வயது பெண் யானை சேற்றில் சிக்கியது. நேற்று பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டது.