திருவான்மியூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மெரிட்டினா (30) வெளியிட்ட காணொலி தொடர்பாக, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முரளிதரன் (56) சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மெரிட்டினா அளித்த புகாரின் பேரில், திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் முரளிதரனை நேற்று கைது செய்தனர்.