ராணிப்பேட்டையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக, ரூ. 5. 45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகள் கொண்ட 'தோழி' மகளிர் விடுதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் புதிய விடுதி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தனர். இந்த புதிய விடுதி பெண்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது.