திருப்பத்தூர்: அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு; பெண்கள் மறியல்

0பார்த்தது
திருப்பத்தூர்: அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு; பெண்கள் மறியல்
நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி குழிக்கொல்லி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் மண் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டது. இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் பச்சூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த பேருந்தையும் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் தார் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி