திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு காதல் தகராறில் திருநங்கை பூமிகாவின் கழுத்தை அவரது கணவர் வல்லரசு பீர் பாட்டிலால் அறுத்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வல்லரசு கைது செய்யப்பட்டார்.