சிறுநீர் கோளாறு சிறப்பு உதவிகாவல் ஆய்வாளர் ஆட்சியரிடம் மனு

268பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா மணி, தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தனக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனது தம்பி தெய்வச்சந்திரன் தனது பெயருக்கு மாற்றி உரிமை கொண்டாடியதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சாதகமான தீர்ப்பு பெற்றார். இருப்பினும், ஒரு வருடமாக நிலப் பெயர் மாற்றத்தில் தீர்வு கிடைக்காததால், சிறுநீரக பாதிப்புடன் சிறுநீர் கழிவுப் பையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு முன்னாள் காவலருக்கே இந்த நிலை என்றால், பொது மக்களுக்கு அதிகாரிகள் எப்படி உதவுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி