வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை அடுத்த மேல்பாடி ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.