
வேலூர்: மடி பிச்சை ஏந்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று (பிப்ரவரி 14) தொடர்ந்து 9-வது நாளாக கண்களை கட்டி மடி பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களின் முக்கிய கோரிக்கையானது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.

































