வேலூரில் காகிதபட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், நண்பர்களான விஜி மற்றும் முரளி ஆகியோர் பீர்பாட்டிலை உடைத்து விக்ரம் என்றவரை குத்தினர். படுகாயமடைந்த விக்ரம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார், பீர்பாட்டிலால் குத்திய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.