வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய போலீசார் நேற்று வீரரெட்டிபாளையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே மது விற்ற அரவிந்தன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் சதுப்பேரி சேர்ந்த சரவணன் (28), அரியூர் ஏ. ஜி. நகரை சேர்ந்த மணி (66) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, 25 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.