வேலூர் மாவட்டம் முத்துமண்டபம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில், மகாலட்சுமி (50) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் சுமார் 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.