வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி கீர்த்திஷா பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி பேருந்து ஓட்டுநர் தமிழ்செல்வனைத் தேடி வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் உறவினர்களின் கதறல் காண்போரை நெகிழச் செய்தது.