வேலூரில் ஒருவர் கொடூர கொலை

1பார்த்தது
வேலூரில் மாடு மேய்த்த தகராறில் விவசாயி பாஸ்கர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாற்றங்கரையோரம் மாடு மேய்ப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 4 பேர் கொண்ட கும்பல் பாஸ்கரை தாக்கியுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ்கர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் வேலூர்-ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.