வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஜானகிராமன் மகன் சந்தோஷ்குமார் (வயது 22). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ்குமார் அந்த பகுதியில் மாமரத்தில் தூக்கில் தொங்கினார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின் பிணத்தை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.