வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா நேற்று மாலை வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் பாலாற்றுக்கு அழைத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் தேரில் இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு, படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.