வேலூர் சத்துவாச்சாரி தென்றல்நகரில் உள்ள ஒரு வீட்டின் அருகே நேற்று (மார்ச்.18) ஆமை ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதனை மீட்டு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வனக்காப்பாளர், கலெக்டர் அலுவலகம் சென்று ஆமையை பெற்று வேலூர் கோட்டைமலை காப்புக்காட்டில் உள்ள நீர்நிலையில் விட்டார். பிறந்து 6 மாதங்களே ஆன ஆமை குஞ்சு என்றும், நீரில் அது நன்றாக நீந்தி சென்றது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.