வேலூரில் 257 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

84பார்த்தது
வேலூரில் 257 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 3 மாதங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 69 பேர் மீதும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக 35 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிய 56 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச் சென்று வாகனத்தை இயக்கிய 4 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிய 48 பேர் மீதும், போக்குவரத்து சிக்னலை மதிக்காத 30 பேர் மீதும், உயிரிழப்புகளை ஏற்படுத்திய டிரைவர்கள் 15 பேர் மீது என 257 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தற்காலிகமாக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து பரிந்துரை செய்வதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி