வேலூரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தையே அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்தது அம்பலமானது. போலீசார் தற்போது தலைமறைவாகியுள்ள தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.