சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. முதுநிலை அஞ்சல் அலுவலர் முரளி தொடங்கி வைத்த இந்த ஊர்வலம், தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி அண்ணாசாலை, மக்கான் வழியாக மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் தபால்துறை ஊழியர்கள் பலர் தேசியக்கொடியை ஏந்தி பங்கேற்றனர்.