தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, தமிழகத்தில் முக்கிய இடங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, வாகன தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.