திமுக இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன்!

1435பார்த்தது
திமுக இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன்!
வேலூர் மாவட்டம், காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலரை வெளியிட்டு சிறப்பரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர், திரு. து. மு. கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப. , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ. பி. நந்தகுமார், திருமதி. அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு. மு. பாபு, துணை மேயர் திரு. சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :