வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு, எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்தவும், கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவவும், சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கலாம்.