வேலூர் மாவட்டத்தில் பள்ளஇடையம்பட்டியைச் சேர்ந்த ரமணி மற்றும் அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஷாலினி ஆகியோரிடம் தனித்தனியாக 4 பவுன் மற்றும் 2 பவுன் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்த நிலையில், டெல்லியில் இருந்து ரயில் மூலம் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை வரவழைத்து, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பாகாயம் போலீஸார் டெல்லியில் முகாமிட்டு சோன்குமார் (32) என்பவரைக் கைது செய்தனர்.