அலமேலுமங்காபுரம்: சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

53பார்த்தது
அலமேலுமங்காபுரம்: சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
வேலூர் அருகே அலமேலுமங்காபுரம் பைபாஸ் சாலையில் இருந்து வெங்கடாபுரம் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு அம்மா உணவகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக சுற்றுப் பகுதியான அழகிரி நகர், வெங்கடாபுரம், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி