வேலூரை அடுத்த சேக்கனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சிலிக்கான் (தாது மணல்) கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் (48) மீது தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.