வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 14) தொரப்பாடியில் உள்ள கால்நடை பல்நோக்கு மருத்துவமனையில் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அந்துவன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாநகர நல அலுவலர் பிரதாப்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.