வேலூா்: சாலையைக் கடக்க முயன்ற முதியவர் உயிரிழப்பு

0பார்த்தது
வேலூா்: சாலையைக் கடக்க முயன்ற முதியவர் உயிரிழப்பு
வேலூரில், ராமா் பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (73) ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய ஊராட்சி அலுவலகம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி