வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். சிவகுமாருக்கும், மனைவி சாந்தகுமாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். தாய் பாப்பாத்தியுடன் வசித்து வந்த சிவக்குமார் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அறையின் மேற்கூரை இடிந்து அவர் தலையின் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.