வேலூர்: சாலையோரம் குவிந்திருந்த மண் அகற்றம்

72பார்த்தது
வேலூர்: சாலையோரம் குவிந்திருந்த மண் அகற்றம்
வேலூர் மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இந்த பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. வேலூர் புதிய பஸ்நிலையம், சத்துவாச்சாரி, காட்பாடி மற்றும் சர்வீஸ் சாலையில் இருந்து கிரீன் சர்க்கிள் வழியாக பெங்களூரு, ஆம்பூர், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இலகுரக வாகனங்கள் சிறிதுதூரத்தில் வலதுபுறத்தில் திரும்பியும், கனரக வாகனங்கள் நேஷ்னல் சிக்னல் சென்று வலதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் செல்கின்றன. கிரீன்சர்க்கிள் பகுதியில் இருந்து நேஷ்னல் சிக்னல் செல்லும் சாலையோரம் வணிகவளாகங்கள் உள்ளன. அதன்முன்பு ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் அங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். மேலும் அந்த பகுதியில் சாலையோரம் மண் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. அதனால் சாலையின் அகலம் குறைவாக காணப்பட்டது.

இந்தநிலையில் வேலூர் போக்குவரத்து போலீசார் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலையோரம் கிடந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதைத்தொ டர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சாலை மற்றும் அதன் ஓரத்தில் கிடந்த மண் முழுவதையும் அள்ளி தூய்மைப்படுத்தினர். இதன் மூலம் சாலை அகலம் அதிகரித்து அந்த பகுதியில் வாகன நெரிசல் குறையும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி