வேலூர்: சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

82பார்த்தது
வேலூர்: சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் வேலூர்-ஊசூர் சாலை, வேலூர் மத்திய சிறைச்சாலை-அமிர்தி சாலை, தெள்ளை-கணியம்பாடி சாலை, வேலூர் பைபாஸ் சாலை, மங்கலம் சாலை, அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலை, ஒடுகத்தூர்-மேலரசம்பட்டு உள்பட பல்வேறு சாலை பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு சாலைகளின் தரம் மற்றும் அளவீடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் வேலூர் ரங்காபுரம்-பிரம்மபுரம் இடையே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப்பணிகளை பார்வையிட்டு அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படியும், சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றியும், கால்நடைகள் மேயாதபடி தடுப்புகள் வைத்தும் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஆர். பிரகாஷ், குமரேசன், உதவி பொறியாளர் விஜயா, அஜித்குமார், சுரேஷ்பாபு மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி