வேலூர்: விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. 1500 போலீசார் பாதுகாப்பு

708பார்த்தது
வேலூர்: விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. 1500 போலீசார் பாதுகாப்பு
வேலூர் அகரம்சேரியில் இன்று (பிப்.23) தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். சேலம் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று அசம்பாவிதம் நிகழாமல் இருக்க 1500 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தவெக சார்பில் 1000 தன்னார்வலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விஜய் இன்று என்ன பேசப்போகிறார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி