வேலூர் பஸ்சில் நகை திருடிய பெண்கள் கைது

65பார்த்தது
வேலூர் பஸ்சில் நகை திருடிய பெண்கள் கைது
வேலூர் அம்முண்டியை சேர்ந்த மல்லிகா (57). இவர் கடந்த மே 30 அன்று அம்முண்டியில் இருந்து வேலூர் நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் 2 பெண்கள் மல்லிகா அருகே அமர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே வந்தனர். அப்போது மல்லிகா தனது கைப்பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க நாணயங்கள் திருடு போயின. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து முனிலட்சுமி (55), அமுலு (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you