தமிழ் திரைப்பிரபலங்கள் சமீபகாலமாக அடிக்கடி ரேசர் அஜித் குமாரை துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும் ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் என துபாயில் தமிழ் நடிகர்கள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.