நெட்பிளிக்ஸின் புகழ்பெற்ற 'வெனஸ்டே' தொடரின் 3-வது சீசனில், பிரபல நடிகை வினோனா ரைடர் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பீடில்ஜூஸ் பீடில்ஜூஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, வினோனா மீண்டும் ஜென்னா ஓர்டேகா மற்றும் இயக்குநர் டிம் பர்டன் ஆகியோருடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இத்தொடர், விறுவிறுப்பான மர்மங்களுடன் உருவாகி வருகிறது.