ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் சுக்கிரனும் மிகவும் முக்கிய வாய்ந்த கிரங்களில் ஒன்றாகும். இன்று (மார்ச் 1) இரவு, சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து வெளியேறி மீன ராசிக்குள் நுழைவார். இந்த சுக்கிர பகவானின் ராசி மாற்றம் நான்கு ராசிகளுக்கு அதிக நன்மையைத் தருகிறது. அதன்படி சுக்கிரனின் ராசி மாற்றத்தால் மேஷம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்களை அனுபவிக்கலாம். இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் அனைத்து விஷயத்திலும் வெற்றி காண்பார்கள். உடல்நலம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.