முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக செலவு செய்தும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி அதிமுகவின் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று (பிப்., 19) விசாரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.