மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸில் பிடிபடாமல் இருப்பதற்காக ஆகாஷ் தப்பியோடிபோது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார்.