விஜய் மீதான வருமான வரி வழக்கில் நாளை தீர்ப்பு

1பார்த்தது
விஜய் மீதான வருமான வரி வழக்கில் நாளை தீர்ப்பு
வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை (பிப்., 06) தீர்ப்பளிக்கிறது. 2015-16 நிதியாண்டில் 'புலி' படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, 2022 ஜூன் 30 அன்று அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்தார். வருமான வரித்துறை மற்றும் விஜய் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி