2026-27-ம் நிதியாண்டிற்கான திருத்திய வரவு செலவு திட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், கல்லூரி மாணவர்களுக்காகப் புதிய 'வெற்றி மடிக்கணினி திட்டம்' செயல்படுத்தப்படும் என அறிவித்தார். கொரோனா பரவலுக்கு பிறகு நிறுத்தப்பட்டிருந்த மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் வகையில், இப்புதிய திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.