வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி.. விரைவில் அறிமுகம்

7693பார்த்தது
வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி.. விரைவில் அறிமுகம்
அரசு சேவையைப் பெற மக்கள், அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கும் விதமாக, 'வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி' மூலம் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு ஆகியவை அடங்கிய 500 சேவைகளை ஒவ்வொருவரும் தங்கள் மொபைலில் இருந்தே பெறலாம் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஆர்.குமார் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி